
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்ற தொகுதி புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட ஒட்டாம்பாளையம் கர்மவீரர் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சீலை ஓடை ஆற்றின் கரையை ரூ. 1.32 கோடி செலவில் பலப்படுத்தும் பணி, ரூ. 6.44 கோடி செலவில் ஒட்டாம்பாளையம் கர்மவீரர் ஆசிரியர் குடியிருப்பில் முதல் தெரு முதல் 10 தெரு வரை உள்ள குறுக்குத் தெருக்களில் புதிய தார்ச்சாலை மற்றும் ‘யு’ வடிவ வாய்க்கால், கொம்பாக்கம் லட்சுமி அவென்யூ மூன்றாவது குறுக்குத் தெரு தொடங்கி சிமெண்ட் களம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, ரூ. 30.57 லட்சம் செலவில் கொம்பாக்கம் அய்யனார் கோவில் அருகில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி என ரூ. 8.7 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய சாலை அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தில் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நீர்பாசனக் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஷாம்ஃபெயின், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனுவாசன் இளங்கோ, இளநிலைப் பொறியாளர் முருகன், பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் ரமேஷ்குமார், இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







