
தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று( பிப்.27) திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஓபிஎஸ், இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் வந்திருந்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ. பன்னீர் செல்வத்தை பூங்கொத்து கொடுத்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






