
புதுச்சேரி அரசு கல்வித்துறையின் சார்பாக உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022 – 23 படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தற்பொழுது படிக்கும் பதினொன்றாம் வகுப்பு (2025 26) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் துணை முதல்வர் திரு R.சிவராம ரெட்டி தலைமையேற்று மடிக்கணனின் அவசியத்தையும் மாணவர்கள் அதனால் அடையும் நன்மையையும் வாழ்வின் உயர்வையும் எடுத்து கூறி தலைமை உரையாற்றினார் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு M. சிவசங்கரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி மடிக்கணினி ஒரு மாணவன் வாழ்வை எவ்வாறு உயர்வு நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை விளக்கிகூறி அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார் பள்ளியின் தமிழாசிரியர் Dr. R ஜனார்த்தனன் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் அமலாபவன் மேரி மற்றும் விரிவுரையாளர்கள் செந்தில் நாயகம், பிரேமா வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியாக திரு விலங்கியல் விரிவுரையாளர் பிரியவாதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் தற்போது படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







