
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நல்லகண்ணு உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






