
மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் இன்று மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். புதுச்சேரி உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கும், புரட்சித் தலைவர் திருவுருவ சிலைக்கும் மாலையணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கபட்டன.மேலும் நகராட்சி அலுவலகத்தில் அரசு சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம்,கல்வி உதவித்தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






