
அதிமுக பொதுச் செயலாளர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் முன்னிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் இணைந்தார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அதிமுகவில் இணைந்த லீமாரோஸ் மார்ட்டின் அவர்களை புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன், மாநில கழக அவ்வைத் தலைவர் அன்பானந்தம், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தனர். உடன் இலட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் திரு சார்லஸ் மார்ட்டின் அவர்கள் அருகில் உள்ளார்.






