
புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 60 வயது நிறைவு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2025-26 ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை ரூ.5,000/- வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
மேலும், இதுசம்பந்தமாக பயனாளிகள் இதுவரை வழங்கிய அசல் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரத்துடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வந்து 24/09/2026 முதல் 15/10/2026க்குள் கையொப்பமிட்டு, அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதியையும் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டலொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மேற்கூறிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது பற்றிய விவரங்கள் அறிய புதுச்சேரி முப்படை நலத்துறை தொலைபேசி எண்ணில் (0413-2253107 / 2250575) தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். — இயக்குநர், முப்படை நலத்துறை, புதுச்சேரி





