
புதுச்சேரி, நவம்பர் 18: இந்திய பிளாஸ்டிக் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (AIPMA) சார்பில் *PLASTIVISION INDIA 2027* என்ற சர்வதேச பிளாஸ்டிக் தொழில் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
2027 ஜனவரி 21 முதல் 25 ஆம் தேதி வரை மும்பையில் உள்ள பாம்பே எக்ஸிபிஷன் சென்டர் (NESCO) வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டக் கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் தொழில்துறையினர், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்திய பிளாஸ்டிக் தொழில்துறையின் வளர்ச்சி!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பிளாஸ்டிக் உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 94,000 பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் செயலாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துறையின் உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் கோடியாகவும், சுமார் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டுக்கு 16 கிலோவாக உள்ள நிலையில், சர்வதேச சராசரி 50 கிலோவாக இருப்பதால், இத்துறையில் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கண்காட்சியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்!
பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், சேர்மங்கள், உற்பத்தி இயந்திரங்கள், துணை இயந்திரங்கள், அச்சுகள், பிளாஸ்டிக் தயாரிப்புகள் மற்றும் தொழில்துறை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மேலும், சர்வதேச B2B வணிகச் சந்திப்புகள், CEO Roundtable, தொழில்நுட்ப மாநாடுகள், தொழில்துறை விருது வழங்கும் விழா, முதலீட்டாளர்கள் சந்திப்பு, Start-up Pavilion, Women in Plastic, GenNext மற்றும் MSME தொழில் வளர்ச்சி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
2023 கண்காட்சியின் வெற்றியைத் தொடர்ந்து!
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாஸ்டிவிஷன் கண்காட்சியில் 1,238 கண்காட்சியாளர்கள், 2,34,000 வணிகப் பார்வையாளர்கள் மற்றும் 102 சர்வதேச Hosted Buyers பங்கேற்றனர். மொத்தம் 1,10,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.
சர்வதேச வணிக வாய்ப்புகளுக்கு புதிய தளம்!
வெளிநாட்டு வாங்குபவர்களையும் இந்திய உற்பத்தியாளர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் Hosted Buyer Programme மற்றும் Reverse Buyer Seller Meet (RBSM) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள், புதிய வணிகத் தொடர்புகள் மற்றும் சர்வதேச முதலீடுகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், மூலப்பொருள் விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய சர்வதேச நிகழ்வாக பிளாஸ்டிவிஷன் இந்தியா 2027 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சி நடைபெறும் விவரங்கள்:
– நிகழ்ச்சி: PLASTIVISION INDIA 2027
– தேதி: 21.01.2027 முதல் 25.01.2027 வரை
– இடம்: Bombay Exhibition Centre (NESCO), மும்பை
– ஏற்பாடு: All India Plastics Manufacturers’ Association (AIPMA)
– இணையதளம்: (http://www.plastivision.org)







