
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” – திருக்குறள்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
பழந்தமிழரின் வீரத்தையும், செழுமையான கலாச்சாரத்தையும் பறை சாற்றும் இந்தச் சித்திரை முதல் நாளில், உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதற்கும் அஞ்சாத வீரம், மக்களாட்சியில் அறம் சார்ந்த அரசியல் என தமிழர்களின் அரசியல் வரலாறு உலகிற்கே வழிகாட்டி. அந்தப் பாதையில் நம் இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்.
விருந்தோம்பலும், ஈகையும் நம் ரத்தத்தில் ஊறியவை. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் பண்பாட்டு அடையாளத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.
மருந்து எனத் தனியாகத் தேடாமல், உணவையே மருந்தாகக் கொண்ட இயற்கை சார்ந்த வாழ்வியலை மீட்டெடுப்போம். ஐந்திணை நிலங்களின் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்ற சமத்துவப் பாதையில், புதிய மாற்றங்களை நோக்கி இந்தப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம். தமிழால் இணைவோம்! தமிழனாக உயர்வோம்!






