
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து முதற்கட்டமாக சென்னையில் 30000-ம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளருக்கான காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் இன்று தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நகர் மன்றத் தலைவர் சுப்பராயலு முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது . இவ்விழாவில் நகர மன்றத்துணைத் தலைவர் ஷமீம்பானு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள். நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







