
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் அவர்களின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் அவர்கள் முன்னிலையில் உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், 17-01-26 அன்று காலை 9.30 மணிக்கு புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கும், படத்திற்கும் மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இதன் தொடர்ச்சியாக, ஊர்வலமாக புறப்பட்டு சுப்பையா சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி வழியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி மாநில முழுவதும் உள்ள கழகத்தினர் புரட்சித் தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.







