சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால், ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.







