
புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பல கட்ட பேச்சுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டது. அதில், வி.சி.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க்பட்டது. இதில் அந்த கட்சியினருக்கு திருப்தி இல்லை. எனவே தற்போது 3 தொகுதிகளில் தங்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகள் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







