
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் பணியாளர்களின் ரேண்டமைசெஷன் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த பொதுக் கண்காணிப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இக்கூட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், துணை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தல் பணியாளர்களின் ரேண்டமைசெஷன் நடைமுறை, பணியாளர் ஒதுக்கீடு தொடர்பான செயல்முறை, கணினி வழி தேர்வு முறை, தேர்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நியாயத்தன்மை உறுதி செய்யப்படும் விதம் ஆகியவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ரேண்டமைசெஷன் நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.






