
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் “கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்குப் பின் கருவின் தன்மையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினத் தேர்வைத் தடை செய்தல்) சட்டம், 1994” [PC & PNDT Act, 1994] தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். சிவராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இக்கூட்டத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் மகப்பேறு துறை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் லட்சுமி சுகுமாரன், குழந்தைகள் துறை தலைமை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) டாக்டர் தேவி, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் முனைவர் கே. குலசேகரன், இன்னர் வீல் கிளப் தலைவி திருமதி சுஜா மதிவாணன் மற்றும் VBEDS உதவி ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் காரைக்காலில்7 உள்ள சில ஸ்கேன் மையங்களுக்கு PC & PNDT குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அந்த ஆய்வுகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், காரைக்காலில் நாகூர் மெயின் ரோடு, நிரவி பகுதியில் அமைந்துள்ள எம்.கே. மருத்துவமனை மற்றும் முஸ்தபா கமாலியா வீதியில் உள்ள ஜென் ஹெல்த் கேர் மையம் ஆகிய இடங்களில் புதிதாக ஸ்கேன் மையம் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ற்போது காரைக்காலில் மொத்தம் 19 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை நடத்துபவர்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி செயல்பட தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கருவின் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், காரைக்காலில் உள்ள அனைத்து ஸ்கேன் மையங்களுக்கும் சட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
காரைக்காலில் PC & PNDT Act, 1994 சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தி ஆலோசிக்கப்பட்டது.






