
புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக இன்று (14-02-26) உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகனதாக நிறைவேற்றப்பட்டன.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
தீர்மானம்: 1
இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் அன்று தலைமை கழகத்தில் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் பொதுமக்குளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்ஸி, மின்சார அடுப்பு, தவா வாணல், பில்டர் ஹீட்டர், மின்விசிறி, சில்வர் பாத்திரம், எல்.ஜி.பி. அடுப்பு, ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவைப் பெட்டி, மற்றும் இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்குவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்: 2
இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என இக்ககூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்: 3
ஏற்கனவே நடைமுறையில் உள்ள நலத்திட்ட உதவிகளை தேர்தலுக்காக நிறுத்த முடியாது என்பது நடைமுறையில் உள்ள ஒன்றாகும். இந்நிலையில் மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசும் அதிமுகவும் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என விஷமத்தனமான பொய் காரணத்தை கூறி 3 மாத உரிமைத்தொகை ரூ.3000-ம் மற்றும் நான்கு ஆண்டுகளாக வழங்காமல் தற்போது புதியதாக கோடைக்கால சிறப்பு உதவித்தொகை என்ற பெயரில் ரூ.2000-மும் ஒருசேர சேர்த்து நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே வழங்கி மக்களை ஏமாற்றி திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்றியுள்ள தமிழக விடியா திமுக அரசையும், தமிழக திமுக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களையும் புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம்: 4
மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் குடும்ப தலைவிகளின் ஒவ்வொரு வீட்டிற்கும், சிறப்பு நிதியுதவி ரூபாய் பத்தாயிரம் தேர்தலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்தி இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 5
அரசின் அறிவிப்பு முலம் நீண்டகாலமாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் பாலசேவிகா, விரிவுரையாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்த வவுச்சர் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஒரு நல்ல முடிவினை மாண்புமிகு முதல்வர்கள் அவர்கள் எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 6
புதுச்சேரி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பணிக்காலத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி கிடைத்திட பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து வாரிசுதாரர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பணி வழங்க மறுப்பது இவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மரணமடைந்தால் அவர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் பணி வழங்கும் போது புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். எனவே புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் காலத்தில் மரணமடைந்த ஊழியர்களில் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக அவரவர் தகுதிக்கேற்ப உரிய பணியை வழங்கிட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம்
கேட்டுக்கொள்கிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர்
ஆர்.ராஜாராமன், மாநில கழக இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன். ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட கழகத்தினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.






