
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படு நிலையில், இந்த மாநிலங்களில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதல் கட்டமாக எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பிறகு தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






