
ரஷியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டெலிகிராம் செயலியும் முடக்கப்பட்டுள்ளது. ரஷிய அரசு உருவாக்கி உள்ள மேக்ஸ் என்ற சூப்பர் ஆப்-ஐ மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷியாவில் வாட்ஸ்அப் செயலியை முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
மேலும் டெலிகிராம் செயலிக்கு ரஷிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ரோஸ்கோம் நாட்சோர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷிய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வீசாட் போன்று உருவாக்கப்பட்ட மேக்ஸ் செயலி மூலம் அரசாங்க சேவைகளையும் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷிய அரசின் இந்த நடவடிக்கைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-ஐ ரஷியாவில் முழுமையாக தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். உள்நாட்டு தளங்களை ஊக்குவிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் இந்த நடவடிக்கையை டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ் கடுமையாக விமர்சித்து உள்ளார். இதற்கிடையே ரஷிய அரசின் மேக்ஸ் செயலி மக்களை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்ட செயலி ஆகும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.









