
பாதிக்கும் ஒரு ஆழமான கவலைக்குரிய விஷயமான – புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஓய்வூதியதாரர்களுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) மூத்த குடிமக்களை வெகுவாக பாதிக்கும் ஒரு கவலைக்குரிய அம்சம். இது குறித்து இந்த மாண்புமிகு அவையின் அவசர கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். சி.ஜி.எச்.எஸ் என்பது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் உயிர்நாடியாகக் கருதப்பட்டது, அவர்களின் மருத்துவத் தேவைகள் கண்ணியத்துடனும் திறமையுடனும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இருப்பினும், புதுச்சேரியில், இந்தத் திட்டம் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுகிறது. புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளுடன் ஆறு மருத்துவக் கல்லூரிகள் இயங்குகின்றன. மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையும் உள்ளது. ஆனால் பட்டியலில் இல்லை. இது ஓய்வூதியதாரர்கள் மருத்துவ வசதி பெறுவதை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. தற்போதைய அமைப்பில் ஓய்வூதியதாரர்கள் முதலில் CGHS மையத்திலிருந்து ஒப்புதல் பெற வேண்டும், பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். அவர்களில் பலர் வயதானவர்கள், பலவீனமானவர்கள். இதன்னால் கால தாமதம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக வயதான நோயாளிகளுக்கு அலைச்சல் ஏற்படுத்துகிறது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
சென்னை போன்ற பெரிய நகரங்களில் வயதான ஓய்வூதியதாரர் திடீரென இருதயக் கோளாறு அல்லது டயாலிசிஸ் தேவைப்படும்போது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் CGHS மையத்தைத் தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது மிகவும் சிரமமானது மட்டுமல்ல – இது வாழ்க்கை பற்றிய விஷயம். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பது பாதிக்கப்படும்போது CGHS இன் நோக்கமே அடிப்பட்டுபோகிறது. தேச சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஓய்வூதியதாரர்கள், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் தடையற்ற சுகாதாரப் பராமரிப்பைப் பெற வேண்டும்.
பல மருத்துவமனைகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வருந்ததக்கது. ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மருத்துவக் கட்டண விகிதங்கள் இல்லை என்பதே ஒரு காரணம். மேலும், பராமரிப்புச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்பக் கட்டண விகிதங்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுவதில்லை என்பது முக்கியமான காரணம். நடைமுறை மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக CGHS இலிருந்து பணம் செலுத்துவது தாமதமாவதுகிறது.
சுகாதாரப் பராமரிப்பு ஒரு சலுகை அல்ல; ஆனால் அது ஒரு அடிப்படை உரிமை. புதுச்சேரியில் CGHS ஐ வலுப்படுத்துவதன் மூலம், இதே போன்ற இடைவெளிகள் உள்ள பிற பிராந்தியங்களுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழச் செய்யலாம். ஓய்வூதியதாரர்களின் பணி ஓய்விற்கு பிறகு அவர்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் மன அமைதியுடனும் வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் CGHS அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின் கீழ் கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரியில் CGHS இன் வரம்பை விரிவுபடுத்துமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். இது ஓய்வூதியதாரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் நேரடியாக, தாமதமின்றி சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும், அவசரநிலைத் தேவைகள் ஆபத்தானதாக மாறும் அபாயத்தைக் குறைக்கும். எனவே அங்கீகாரம் பெரும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும், ஒப்புதல்கள் பெறுவதை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
எனவே, CGHS வசதிகளைப் பெறுவதில் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு சுகாதார அமைச்சரையும் இந்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.






