
வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று தொடங்கி வைத்தார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு மற்றும் வி. மணவெளி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் தலா ரூ. 11 லட்சம் என மொத்தம் ரூ. 22 லட்சம் செலவில் இரண்டு கிராமங்களில் உள்ள நீர் உந்து நிலைய வளாகத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, வில்லியனூர் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதி மற்றும் திருக்காமீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள அருணாச்சாலம் நகர் பகுதியில் ரூ. 13,90,000/–லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி, வில்லியனூர் தில்லை நகர் – விஐபி கார்டன் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு ரூ. 8,20,000/– லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 35,90,000/– லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய மேம்பாட்டு பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆதிதிராவிட நலத்துறை மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ. 1,40,000/– லட்சம் தொடர் நோய் நிதியுதவிக்கான அடையாள அட்டையை பயனாளிகளிடம் வழங்கினார்.
இதில், பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவிப் பொறியாளர் பீனாராணி, கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, குடிநீர் பிரிவு இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






