
புதுச்சேரி மாநில வன்னியர் பாதுகாப்பு பேரியக்க நிறுவனத் தலைவர் செந்தில் என்கின்ற ரமேஷ் தமது ஆதரவாளர்கள் 500 பேருடன் திமுக–வில் இணையும் நிகழ்ச்சி அக்கார்டு ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வன்னியர் பாதுகாப்பு பேரியக்க நிறுவனத் தலைவர் செந்தில் என்கின்ற ரமேஷ் தமது ஆதரவாளர்கள் மாநில செயலாளர் முருகன், இளைஞர் அணித் தலைவர் பூவரசன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சண்முகம், காளி, சரவணன், ஜெயராமன், பாலமுருகன், விக்னேஷ்வரன், பரசுராமன், பூபாலன், இளைஞர் அணிச் செயலாளர் அன்பரசு, கண்ணன், கோபால், கதிர் உள்ளிட்ட 500 பேர் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலையில் திமுக–வில் இணைந்தார். திமுக–வில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாட்டைபோல் புதுச்சேரியில் வளிமையான ஒரு அரசை அமைக்க வேண்டும் என்பதுதான். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தலைவர் தம்மை அர்ப்பணித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி அசூரவளர்ச்சி. புதுச்சேரியின் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு பெரியது. தமிழ்நாட்டில் தொழில்துறை, வேலைவாய்ப்பில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வளமான, வலிமையான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதே தலைவரின் லட்சியம். புதுச்சேரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சூரியன் உதிக்க வேண்டும். கூட்டணியை தலைவர் பார்த்துக்கொள்வார். கழகத்தில் இணைந்த செந்தில் அவர்களுக்கு தலைவர் அவர்கள் நல்ல இடத்தை உறுதியாக கொடுப்பார். இவ்வாறு பேசினார்.
இந்த இணைப்பு நிகழ்ச்சியில், திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் ப. வடிவேல், இரா. சக்திவேல், கோ. தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






