
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கவர்னர் உரையின்போது சர்வாதிகார தனமான செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரங்கேற்றி உள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் அமைப்பு தலைவராக இருப்பவர் ஆளுநர், அப்படிப்பட்ட ஆளுநரை தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் அவமதித்து அநாகரீகமான கண்டனங்களை தெரிவித்து இருப்பது என்பது அரசியல் அமைப்பையே கேவலப்படுத்திய செயலாகும்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்பது அம்பேத்கர் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள ஒன்றாகும், ஆனால்..
தமிழக ஆளுநரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் ஆண்டின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்தப்படும் ஆளுநர் உரையை நீக்கம் செய்வோம் என்றும் அனைத்து மாநிலங்களிலும் நீக்கம் செய்வேன் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது என்பது அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயலாகும்.இது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு எடுத்துக்காட்டாகும். அரசியல் சாசனத்தை எதிர்க்கும் எந்த மாநில முதலமைச்சராக இருந்தாலும் அந்த பதவியில் அவர் நீடிப்பதற்கு தகுதியற்றவர் ஆவார். அந்த அடிப்படையில் அரசியல் சாசனத்தை எதிர்க்கும் தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களை மத்திய அரசு அரசியல் அமைப்பு சட்டப்படி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவரது தலைமையிலான அரசை உடனடியாக மத்திய அரசு முடக்கம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது, பல்வேறு பிரச்சனைகளை மூடி மறைப்பது.போன்ற செயல்களில் ஈடுபடும் அவர்கள் மக்களுக்கான நேர்மையான அரசு நடப்பது போன்று போலி தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசால் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் அவர்கள் படிக்காமல் புறக்கணித்தது என்பது பாராட்டக் கூடிய விஷயமாகும். மக்கள் விரோத திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்புயின்மை, போதை பொருள் விற்பனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது. இதையெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் பிரதமர் வீடு திட்டத்தில் மக்கள் மானிய உதவிகளைக் கேட்டு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர் முதலில் வழங்கப்பட்ட சுமார் 1550 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஒன்றை ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டிற்கு நிதி உதவி அளிக்கப்படவில்லை.
அதேபோன்று புதிதாக 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மீனவர்கள் இனத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்தும் என்று அறிவித்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை இது போன்ற மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது,
இன்னும் ஒரு மாதத்தில் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. எனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஆளும் அரசு செய்ய வேண்டும்.
பல்வேறு துறைகளில் செலவிடப்படாத தொகைகளை நிதி மடை மாற்றம் செய்ய சட்டமன்றத்தின் அனுமதி பெறுவதற்கு உடனடியாக இந்த மாதத்திற்கு சட்டமன்றத்தைக் கூட்ட முதலமைச்சர் ரங்கசாமி அவர்களும் துணைநிலை ஆளுநர் அவர்களும் மக்கள் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் நிலையில் இருந்த தம்பி சார்லஸ் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியுடன் இணைந்து தேர்தலில் சந்திப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் சந்தித்தது என்பது பாராட்டதிற்குரிய விஷயமாகும். இதை அதிமுக வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில கழக அவ்வைத்தலைவர் அன்பானந்தம்,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.







