
ுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட தேர்தல்துறை மற்றும் தேர்தல் துறையின் ஒரு அங்கமாக விளங்கும் ஸ்வீப் அமைப்பும் இணைந்து மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இன்று காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி.இஹிதா ராட்டி., இ.ஆ.ப அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் அதிகம் சேரும் இடம் ஆகிய வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அடங்கிய சுவரொட்டி நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் துறையின் பொது மேற்பார்வையாளர் உயர்திரு.பாலா ஓம் பிரஜாபதி,இ.ஆ.ப
மற்றும் வங்கி மேலாளர்கள் முன்னிலையில், 100% வாக்குப்பதிவு, நெறிசார்ந்த வாக்குப்பதிவு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாக்குப்பதிவு ஆகியவற்றை வலியுறுத்தும் ஒட்டுச்சீட்டுகள் ஒட்டப்பட்டன.மேலும் தேர்தல் மேற்பார்வையாளர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஸ்லீப்பிங் செயல் திறனை மிகவும் நன்றாக உள்ளது. இதுபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஏற்படுத்த செயல் திறனை ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
இவர்களுடன் தொடர்பு அதிகாரி முனைவர். சோழன் பங்குபெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியானது காரைக்கால் மாவட்ட காவல்துறை ஒருங்கிணைப்புடன் ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எம். தாமோதரன், உறுப்பினர்கள் முனைவர்.எஸ்.மணிகண்டன் திரு.கே.ஞானமுருகன், திரு பிரதீப் மற்றும் திருமதி.பிரியதர்க்ஷினி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







