
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு படையை வலுப்படுத்துதல் மற்றும் கடலோர பாதுகாப்பை மேம்படுத்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (13.03.2026) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி இஷிதா ராட்டி, ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் நடைபெற்றது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய காவல் படையின் அதிகாரிகள், காரைக்கால் மாவட்ட கடலோர பாதுகாப்பு காவல் படையின் அதிகாரிகள், மேலும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக மூன்று துறைகளும் ஒருங்கிணைந்த செயற்பாட்டை மேற்கொள்வது, தகவல் பரிமாற்ற முறைமையை மேம்படுத்துவது, அவசரநிலை நேரங்களில் விரைவான நடவடிக்கை எடுக்க தேவையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்குவது, கடல் வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுப்பது, மீனவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல், கண்காணிப்பு உபகரணங்களை மேம்படுத்தல், ரோந்துப்படகுகள் இயக்கத்தை தீவிரப்படுத்தல், மீனவர்களிடமிருந்து தகவல் சேகரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்தல், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தல் தொடர்பாக கூட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கூட்ட முடிவில், காரைக்கால் மாவட்டத்தின் கடலோரப் பாதுகாப்பை பல அடுக்குகளில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை திட்டங்களை தீயாரித்து, அவற்றை கட்டத்தோடு நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.






