
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் அவர்கள் முன்னிலையில் உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில்,இன்று காலை 9.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ,படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இதன் தொடர்ச்சியாக,ஊர்வலமாக புறப்பட்டு சுப்பையா சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி வழியாக புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுச்சேரி மாநில முழுவதும் உள்ள கழகத்தினர் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,மாநிலத் துணைத் தலைவர்,ஆர்.ராஜாராமன், மாநில கழக இணைச் செயலாளர் ஆர்.வி.திருநாவுக்கரசு, புதுச்சேரி நகரக் கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம். உமா என்ற கோவிந்தம்மாள்,எம். நாகமணி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏ.,காந்தி, பி. குமுதன்,உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ். சித்தானந்தம்,மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி,,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏ.பாப்புசாமி,,உட்பட கழகத்தினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.







