
புதுச்சேரி, செப்.15: 2026–27 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
முதல் முறையாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்களும், 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கான பதிவு 15.09.2026 முதல் 30.09.2026 வரை நடைபெறும். தகுதியான தனித்தேர்வர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சேவை மையத்தில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சிக்குப் பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணை பயன்படுத்தி, ஹால் டிக்கெட் தேர்வர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விண்ணப்பிப்பவர்கள், பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் சம்பந்தப்பட்ட மையத்தில் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். 80% வருகைப் பதிவு பெற்ற தனித்தேர்வர்கள் மட்டுமே 2026–27ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026–27 கல்வியாண்டு 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கான பதிவு தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு.




