
புதுச்சேரி: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வே. கார்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேதுசெல்வம், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, கே.எம்.பி. லோகையன், டி. அருட்செல்வி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.




