
புதுச்சேரி: 6.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் பதவிகள் விருதுகள் மற்றும் ஆசிரியர் தின விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு புதியதாக பதவிகள் விருதுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர், அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தின விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது. Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
பதவிகள் ஏற்றவர்கள் விபரம் வருமாறு ஏழை மக்கள் கழகம் மாநில இணை செயலாளராக ஜெய்சங்கர் மாநில பொருளாளராக தேன்மொழி மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கிரிஜா ஊசுடு தொகுதி தலைவராக சந்திரசேகர், வில்லியனுர் தொகுதி தலைவியாக அன்பரசி, ஊசுடு தொகுதி பொதுச் செயலாளராக கோகுல் நாத், ஊசுடு தொகுதி பொருளாளர் பரமேஸ்வரி, ஏம்பலம் தொகுதி தலைவராக லூர்து நாதன் ஆகியோர்கள் மிக சிறப்பாக அனைவரும் பதவி ஏற்றனர் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவைக்குமார் மற்றும் ஏழை மக்கள் கழகம் மாநில அவை தலைவர் சார்லஸ் லாஸ்பேட்டை தொகுதி தலைவர் நாகப்பன், இந்திரா நகர் தொகுதி தலைவர் மணிவண்ணன், மாநில துணை பொருளாளர் ரமேஷ், மாநில ஆண்மீக அணி தலைவி ஜெய்சாந்தி, மாநில மகளிர் அணி துணை தலைவி லலிதாம்பிகை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முத்தையன், மாநில துணை அமைப்பாளர் ராஜாமனி, பாகூர் தொகுதி தலைவர் இலையராஜா, அரியாங்குப்ம தொகுதி சமூக சேவகர்கள் கண்ணன், செல்வராசு மற்றும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.







