
புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் PMAY 2.0 திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கு உப்பளம் தொகுதியை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையாக தலா ரூ.2,75,000 வீதம் மொத்தம் ரூ.11 லட்சமும், இரண்டாவது தவணை தொகையாக இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சமும், மூன்றாவது தவணை தொகையாக ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வழங்குவதற்கான ஆணையை தற்காலிக சபாநாயகரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்கள் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இதே போல் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 8 நபர்களுக்கு தலா ரூ.13,000 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து நான்காயிரத்திற்கான ஆணையினை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார். இந்நிகழ்வின் போது ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர் சிவா,உப்பளம் தொகுதி அதிமுக செயலாளர் துரை, நேதாஜி நாகர் வார்டு செயலாளர் பிரகாஷ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.







