
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிக்கும் பணிக்காக தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அவரவர் வாக்குச்சாவடியில் எவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, திமுக வேட்பாளரின் வெற்றிக்கு எப்படி பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம். லோகையன், டி. அருட்செல்வி, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், கோ. தியாகராஜன், ப. வடிவேல், க.ர.ஆறுமுகம், மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுமதி, வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, மகளிர் துணைத் தலைவர் பிரியதர்ஷினி உள்ளிட கழகத்தினார் உடனிருந்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper




