
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 – ஆவது பிறந்த நாளான முன்னிட்டு இன்று காலை 10.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் மாநில கழக செயலாளர், தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, முன்னாள் மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, தொகுதி கழக செயலாளர்கள் ஆறுமுகம், டாக்டர் கணேஷ், கமல்தாஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜானிபாய் முன்னாள் தொகுதி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.




