
புதுச்சேரி நகர பகுதியில் உள்ளது வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசு சார்பில் நடந்த 80 தாவது சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில் பள்ளிகளுக்கு இடையே நடந்த அணிவகுப்பில் வ உ சி அரசு மேல்நிலை பள்ளி முதலிடம் பிடித்து முதல்வரிடம் பரிசு பெற்றது. Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அணிவகுப்பை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஐயப்பன் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். அணிவகுப்பில் முதலிடம் பிடித்த வ உ சி பள்ளி மாணவர்களை முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பாராட்டினர்.
இந்நிலையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடி பள்ளி ஆசிரியர்களால் ஏற்றப்படும். இந்த வாரம் நடந்த கொடியேற்று விழாவில் பரிசு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கி சென்ற மாணவன் ஐயப்பன் தேசியக் கொடியை ஏற்ற வைத்து கௌரவிக்கப்பட்டார்.
அணிவகுப்பில் பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி துணைமுதல்வர் சிவராம ரெட்டி உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்.






