
புதுச்சேரி: 16- வது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு நாளை சிவகவி ஓட்டலில் அறிமுகம், புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
எதிர்க்கட்சித்தலைவர் நாஜிம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ இளங்கோ, சார்பு செயலாளர் ஜான்சி, முன்னாள் பட்ஜெட் அதிகாரி பொன்னுசாமி, சட்டசபை செயலர் தயாளன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து சட்டசபையில் முதலில் பாட வேண்டும் என நேரு எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானமும், எதிர்க்கட்சித்தலைவர் நாஜிம் ஒரு கடிதமும் அளித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் ஆணை, சுற்றறிக்கை, குறிப்பாணை வழிகாட்டுதல்கள் உள்ளது. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் தமிழ் மீது உள்ள பற்றால், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தின விழாவின்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. எனவே சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை மாண்புமிகு முதல்அமைச்சர் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சட்டப்பேரவை செயலர் தயாளன் உடனிருந்தார்.






