
புதுச்சேரி அரசு சார்பில், (20.08.2026) முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் “நல்லிணக்க நாள்” ஆகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், ராஜீவ் காந்தி சிலைச் சதுக்கத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்நிகழ்வில் மாண்புமிகு தற்காலிக சபாநாயகர் அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. இறுதி நிகழ்வாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் “நல்லிணக்க நாள் (சத்பவன திவாஸ்)” உறுதிமொழி ஏற்கப்பட்டது.






