
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி, புதுப்பேட்டை அண்ணா வீதி அகத்தியர் விதி லாசுப்பேட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருகிறது இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக இந்த குடிநீரை அருந்துவதால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது, தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை இவைகளை சரி செய்ய வலியுறுத்தி இன்று சேதுசெல்வம் தலைமையில் லாஸ்பேட்டை பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் நாகராஜ் அவர்களை சந்தித்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது சரி செய்ய வலியுறுத்தப்பட்டது இதனை ஏற்று உடனடியாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சார்ந்த லோகு, ரமேஷ், கணேஷ், செந்தில், பாஸ்கர், ரத்தனம் ஆகியோர் உடன் இருந்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






