
முத்தியால்பேட்டை, சோலை நகர், பாடசாலை வீதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை, மாண்புமிகு முதலமைச்சர் திரு. NR ஐயா அவர்கள் திருக்கரங்களால் திறந்து வைத்தார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் நமச்சிவாயம் அவர்களும், மண்ணின் மைந்தன், சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அவர்களும் உடனிருந்தனர். மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் வகையில் இப்புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் அப்பகுதி மாணவ-மாணவியர்களுக்கு பெரும் பயனளிக்கும் எனக் கூறி, அவர்களை அன்புடன் வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தோழர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






