

புதுச்சேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சான்றிதழ் சேவைகள், புதிய ஆன்லைன் தளம் மூலம் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் வருவாய்த்துறை சேவைகளை எளிமையாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில், https://serviceonline.gov.in என்ற இணையதளத்தில் புதிய இணையவழி சேவைத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தளத்தின் மூலம் பொதுமக்கள் கீழ்கண்ட சான்றிதழ்கள் மற்றும் சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
- குடியிருப்புச் சான்றிதழ் (Residence Certificate)
- வருமானச் சான்றிதழ் (Income Certificate)
- சாதி / சமூகச் சான்றிதழ் (Caste / Community Certificate)
- வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate)
- பட்டா பெயர் மாற்றம் (Patta Transfer) உள்ளிட்ட வருவாய்த்துறை சேவைகள்.






