
புதுவை அரசு, கலை, பண்பாட்டுத்துறை சார்பில் மறுமலர்ச்சி கவிஞர் புதுவை சிவம் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா நேற்று புதுவைச் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. விழாவை மாண்புமிகு கலை, பண்பாட்டு துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார். கவிஞர் புதுவை சிவம் குறித்து பேராசிரியர் அண்ணா ஜெகன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கலக்கல் காங்கேயன் தலைமையில், கவிஞர் புதுவை சிவம் படைப்பில் மேலோங்கி நிற்பது தமிழின் வளமா? சமுதாய நலமா ? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதை அடுத்து பட்டம்மாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பேச்சாளர்கள், கவிஞர்கள் பலர் பங்கு பெற்றனர்.
முன்னதாக முனைவர் ஆனந்தன் தலைமையில் ராசு ரிதம் குழுவினரால் புதுவை சிவம் எழுதிய பாடல்கள் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்புரை வழங்கினார். தமிழ் மாமணி பூங்கொடி பரங்குசம் முன்னிலை வகித்தார். முனைவர் சிவ இளங்கோ நோக்கு உரையாற்றினார் . முடிவில் துறை கண்காணிப்பாளர் முகமது கலிஃபா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர் புதுவை சிவம் குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper








