
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு பொறுப்பு தலைமை நீதிபதி திரு. மனோஜ் குமார் திவாரி அவர்கள் நேற்று (23.10.2026) புதுச்சேரிக்கு வருகை புரிந்தார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு பொறுப்பு தலைமை நீதிபதி அவர்களுக்கு, புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநர் முனைவர் குலசேகரன், மக்கள் தொடர்பு அதிகாரி திரு. வசந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இவ்வரவேற்பு நிகழ்வில் நீதித்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று, மாண்புமிகு பொறுப்பு தலைமை நீதிபதி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper









