
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று(04.09.2026)மாணவர்களின் அறிவியல் கண்காட்சி விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
விழாவில் தொகுதி சட்டமன்ற உருப்பினரும், புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவை தலைவருமான மாண்புமிகு. திரு. A.அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் அறிவியல் செயல்பாட்டு மாதிரிகளை பார்வையிட்டு மாணவர்களின் திறமைகளை பாராட்டினார். அறிவியல் கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் வைத்திருந்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசும்,பதக்கமும் வழங்கினார்.
இவ்விழாவிற்கு பொறுப்பாசிரியை வி. வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் இரா. ஆனந்தராஜ் வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை ச. மனோரஞ்சிதம் நன்றியுரையை வழங்கினார்.







