
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வரை தலைமைச் செயலர் மற்றும் அனைத்து அரசுத்துறை செயலர்களும் பேரவையில் இருக்க வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் உத்தரவு.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது துறை சார்ந்த விவரங்கள் மற்றும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும் வகையில், தலைமைச் செயலர் மற்றும் அரசுத்துறை செயலர்கள் பேரவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கை வைத்தார்..இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அன்பழகன்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் வரை தலைமைச் செயலர் மற்றும் அனைத்து அரசுத்துறை செயலர்களும் பேரவையில் இருக்க வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் உத்தரவிட்டார். அதே நேரத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பேரவையில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் அன்பழகன் அறிவுறுத்தினார்.
இவ்வாறு உரிய காரணமின்றி அதிகாரிகள் பேரவையில் இருந்து வெளியேறும் பட்சத்தில், முதல்வரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.






