
சுதந்திர தின நல்வாழ்த்துக்களை புதுச்சேரி மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். போராடி பெற்ற சுதந்திரத்தின் நோக்கத்தை பேணி காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டை தங்களது இன்னுயிரையும், சொத்து சுகங்களையும் இழந்து சிறைவாச கொடுமைகளை அனுபவித்து நமக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தன்னலமிக்கா தியாகத் தலைவர்களின் தியாகங்களை மதித்து போற்றப்பட வேண்டியது நம் பொறுப்பாகும்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
சுதந்திரத்திற்கு பின்னும் சிதறி கிடந்த நம் பாரத தேசத்தை ஒருங்கிணைத்து ஒரே தேசமாக உருவாக்கி உலக அளவில் போற்றப்படும் மிகப்பெரிய ஜனநாயக நம் இந்திய திருநாட்டை கட்டி காப்பது ஒவ்வொரு இந்தியனின் உயிர் மூச்சாகும்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் நம் நாட்டு பிரதமரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தேசத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் அற்ப அரசியல் தலைவர்களின் துர்போதனைகளை செவி மறுக்காமல் நம் நாட்டை மதிப்பு மிக்க நாடாக பாதுகாப்போம். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது சந்ததியினரின் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என உறுதியேற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






