
வெள்ளையர்களை விரட்டியடித்து நம் தாய்த் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
என்ற மகாகவி பாரதியார் அவர்களின் பாடல் வரிகளின்படி, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திட முடியும் என்பதை உணர்ந்திட வேண்டும்.
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டிட, தன்னலமற்ற பல சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அத்தகைய விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகச் சீலர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் போற்றி வணங்குதற்குரிய நன்னாளாக இந்தச் சுதந்திரத் திருநாள் விளங்குகிறது.
போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்து, அனைவரும் ஒன்றுபட்டு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
அனைவருக்கும் எனது இனிய *சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை* மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.






