
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கிராம மற்றும் நகர்ப்புற CSC VLEக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களுக்கு எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்த புதிய மென்பொருள் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சட்ட வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பத்தின் செயல்முறையை பொதுமக்கள் கண்காணித்து அறிந்து கொள்ளும் (Trace & Track) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் 17.08.2026 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.






