
புதுச்சேரியில் 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொட வருகின்ற 24-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த செயல்பட்டு சபாநாயகர் அன்பழகன்:
16-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 24.8.2018 கூடுகிறது அன்றைய தினம் ஆளுநர் 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
அன்று தினம் பிற்பகல் 3 மணி அளவில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்
சட்டமன்றம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் குழு கூடி முடிவு செய்யும் செயல்பாட்டு சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது போன்று நாளை புதுச்சேரி வரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
சபாநாயகர் தேர்தல் நடக்கும் பட்சத்தில் அதிமுக அதில் போட்டியிடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.






