
ராஜ்பவன் சட்டமன்றத் தொகுதியின் ஏறத்தாழ பாதிப் பகுதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் காவல் எல்லைக்குள் அமைந்துள்ளது, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் குறிவைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும்.
மேலும், உள்ளூர் கோயில்கள் தொடர்பான விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு, தேவையில்லாத பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் செயல்படுவதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
காவல்துறையின் முதன்மை கடமை சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதும், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி நியாயமான முறையில் சேவையாற்றுவதும்தான். ஆனால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கைக்கு எதிரானதாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளேன்.






