
மதுரையில் செய்தியாள்களிடம் அவர் பேசியதாவது; காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா மதிக்காமல் இருந்து வருகிறது. கடந்த 29ம் தேதி முதல் 3,500 கனஅடியை திறந்திருக்க வேண்டும். அதை ஏதுமே செய்யவில்லை. கர்நாடகா முதல்வரும் தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார். வரும் ஆக.,3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர இருக்கிறது. அதற்கான ஆலோசனைகள் முடிவடைந்து விட்டன.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
நமக்கான தேவை நம்முடைய நீரை பெற வேண்டும். அதற்கான அனைத்து வழிவகைகளையும் முதல்வர் செய்து வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது, இபிஎஸ் உள்பட அனைவரும் இருந்தார்கள். அப்புறம் ஏன் வழக்கு போட வேண்டும். கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும், 3500 கனஅடி என்பது 4.5 டிஎம்சி தான். அதுமட்டுமில்லாமல், கடந்த 3 மாதங்களில் 17 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் உச்சநீதிமன்றம் செல்லும் போது அவர்கள் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். இதற்காக, நாம் உச்சநீதிமன்றம் செல்லாமல் இருக்க முடியாது. நிரந்தர தீர்வு தேவை. மேகதாது அணைக்கு எதிராக தனி வழக்காக போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






